மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர். டாக்டர்.தரேஸ்அஹமது, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் ,இராஜாசிதம்பரம்,எஸ்.முருகேசன், ராஜீ, என்.செல்லத்துரை, வேணுகோபால், வரதராஜன் உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
குறிப்பாக பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் வெட்டப்பட்ட கரும்புக்கு விரைவில் பணம்; பட்டுவாடா செய்யப்படவேண்டுமென்றும், இணை மின்சாரம் தயாரிக்கும் பணி மற்றும் ஆலை நவீனப்படுத்துதல் பணி விரைவில் முடிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்,
விவசாய மின் இணைப்பு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விதை விற்பனையாளர்கள் விவரம் வேண்டுமென்றும்,
பயிர்க்கடன் முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு விரைவில் பயிர்க்கடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்,
கட்டை கரும்பிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பயிர்க்கடன் வழங்க வேண்டுமென்றும்,
கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களில் மாட்டுத்தீவனம் கிடைக்க வேண்டுமென்றும், தோட்டக்கலைத்துறையில் கையேடு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர;.
விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை விளக்கம் அளித்து விரைவில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் , மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூலை 2015-ம் மாதம் முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழையளவு 195 மி.மீ ஆகும். 30.7.2015 வரை ஜூலை மாதம் முடிய 327.80 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் தற்போது நெல் 207 எக்டரிலும், கரும்பு 294 எக்டரிலும், பயிறுவகை பயிர்கள் 24 எக்டரிலும், தானியப்பயிர்கள் 225 எக்டரிலும், மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள் 190 எக்டரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மை விரிவாக்க மையங்களில்; நெல் 96.66 மெ.டன், நிலக்கடலை 24.36 மெ.டன், பயறுவகை விதைகள் 4.3 மெ.டன், தானியப்பயிர் விதைகள் 0.22 மெ.டன் விதைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியரில் உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் யூரியா 850 மெ.டன், டி.ஏ.பி. 555 மெ.டன், பொட்டாஷ் 600 மெ.டன் மற்றும் என்.பி.கே. 810 மெ.டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு உள்ளது சரியான விலையில் பெற்று விவசாயிகள் பயனடைய வேண்டு;ம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் மூலம் வேளாண்மை அலுவலர்கள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மண் ஆய்வு செய்து வருகின்றனர். மண்பரிசோதனை செய்துகொள்ள இதுவே சரியான தருணம் என்பதால் இந்த வாய்ப்பினை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தி மண்மாதிரிகளை கொண்டுவந்து ஆய்வு செய்துகொண்டு சரியான அளவில் உரமிட்டு உற்பத்தியை பெருக்கி பயனடைய வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திற்கு இலக்கீடு பெறப்பட்டுள்ளது. எனவே நுண்ணீர; பாசனம் செய்ய விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண்மை, தோட்டக்கலை விரிவாக்க மையங்களில் விண்ணப்பங்கள் கொடுத்து முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 1.7.2015 முதல் 21.07.2015 வரை பயிர்க்கடன் மேளா நடைபெற்றதில் இதுவரை 1,337 விவசாயிகள் ரூ.8.05 கோடி மதிப்பில் பயிர;க்கடன் கேட்டு; விண்ணப்பித்துள்ளனர்.
இதுவரை 105 விவசாயிகளுக்கு ரூ.19.11இலட்சத்திற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதர விண்ணப்பதாரர்களுக்கும் தகுதியின் அடிப்படையில் பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த ஆண்டிற்கு வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.110கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கீடு வரப்பெற்றுள்ளது. இதுவரை 4,447 நபர்களுக்கு ரூ.32கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் தேவைப்படும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பிக்கலாம்.
ஒரு ஹெக்டர் ஒரு இலட்சம் திட்டத்தில் ஒரு ஹெக்டரில் மக்காச்சோளத்தில் 10டன் மகசு+ல் மற்றும் பருத்தியில் 25 குவிண்டால் சாகுபடி செய்வதற்கும் இலக்கீடு 2015-16ஆம் ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு தலா 1000 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளனர்.
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் 350 ஹெக்டரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய இலக்கீடு பெறப்பட்டுள்ளது. 04.07.2015 அன்று நடைபெற்ற முகாமில் 200 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. மேலும் விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் ஒரு ஹெக்டருக்கு ரூ.12 ஆயிரம் மானியமாகும். உயிர் உரம் மற்றும் நுண்ணூட்டச்சத்து பாக்கெட்டுகள் வட்டார விரிவாக்க மையம் மூலமாக வழங்கப்படும், உரங்கள் தொடக்க வேளாண்மை சங்கங்களிலிருந்து பெற்றுத்தரப்படும், மீதமுள்ள தொகையினை விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக வங்கிகணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்தார;..
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி, வேளாண்மை துணை இயக்குநர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வே)(பொ) ஆறுமுகம், தோட்டக்கலை துணை இயக்குநர்(பொ), இந்திரா, மின்சாரவாரிய செயற்பொறியாளர் கண்ணன், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் கிருஷ’ணசாமி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.