ஹோட்டல் உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டிய 5 பேர் கைது : மேலும் 2 பேருக்கு வலைவீச்சு

schedule
2017-06-23 | 12:39h
update
2026-06-18 | 10:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

5 arrested for threatening with the knife, the owner of the hotel: The police search 2 persons

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில், அதன் உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உணவகம் நடத்தி வருபவர் ராமலிங்கம் (42). இவரது கடையில் பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் விக்னேஷ்வரன் (24), துறைங்கலம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சர்குணராஜா மகன் மகுடேஸ்வரன் (24), கே.கே.நகரைச் சேர்ந்த சார்லஸ் மகன் வினோத் (21), சத்திமனை வேலூரைச் சேர்ந்த இருதயசாமி மகன் கோபிநாத் (21) ஆகியோர் நேற்றிரவு பிரியாணி பார்சல் வாங்கி சென்று உள்ளனர். வாங்கி சென்ற பிரியாணி சரியில்லை என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். கடை உரிமையாளர் பிரியாணிக்கு உண்டான பணத்தை திருப்பி கொடுத்ததாகவும், ஆனால், ஏற்க மறுத்த அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி 10 பத்தாயிரம் பணம் கேட்டு மிரட்டியாக கூறப்படுகிறது. இதனால், ஹோட்டல் உரிமையாளருக்கும், இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

இதுகுறித்து ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப பதிவு செய்த பெரம்பலூர் போலீஸார் 5 பேரை கைது செய்து, குற்றவியல் நடுவர் மன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

அந்த வழக்கு தொடர்பாக தொலைபேசியில் பேசிய 2 பேரை மேலும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 10:51:33
Privacy-Data & cookie usage: