பெரம்பலூர் நகரில் சுற்றித் திரியும் நாய்கள் 5 பேரை கடித்தது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்

schedule
2017-01-12 | 08:31h
update
2026-06-27 | 05:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

5 persons In Perambalur bites dogs roam in the city, were being treated in hospital

பெரம்பலூர் நகரில் சுற்றித் திரியும் நாய்கள் நடந்து சென்ற வழக்கறிஞர் உள்பட 5 பேரை கடித்ததால் , நகரில் சுற்றித்திரியும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வளர்ந்து வரும் பெரம்பலூர் நகராட்சியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், திருநகர், இந்திரா நகர், கம்பன் நகர், சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், மதனகோபாலபுரம் உள்ளிட்ட நகரத்தின் முக்கிய வீதிகளில், அவை கூட்டம் கூட்டமாக கும்பாளமிட்டு சுற்றித்திரிகின்றன. இதனால், ரோட்டில் நடந்து செல்வோர் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் செல்வோரை கண்டதும் நாய்கள் துரத்துகின்றன.

வண்டியில் செல்வோர் பயத்தில் கீழே விழுந்து விபத்துக்களை சந்திக்கின்றனர். சில நேரங்களில் நடந்து செல்பவர்களை விரட்டி விரட்டி கடிக்கிறது. மேலும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் தூங்க விடாமல் இரவு முழுவதும் ஊளையிட்டு வண்ணமாக உள்ளது. அவ்வழியாக வருவோரையும், போவோரையும் மிரட்டி விரட்டுவதுடன், குழந்தைகள், ஆடு, மாடுகளையும், விரட்டி விரட்டி கூட்டம் கூட்டமாக நாய்கள் கடித்து குதறுகின்றன. அதனால் கால்நடை வளர்ப்போரும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

Advertisement

இவ்வாறு அதிகரித்து வரும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நகராட்சி சார்பில் நாய்கள் பயண வாகனம் வாங்கப்பட்டது. இந்த வாகனத்தில் அவை பிடித்துச்செல்லப்பட்டு அதற்கான மையங்களில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றன. தற்போது இந்த வாகனம் நகராட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.தற்போது நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்தி, நாய்க்கடியில் இருந்து பொதுமக்களை காக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நேற்றிரவு மட்டும் நடந்து சென்றவர்களை நாய்கள் கடித்ததால் 5 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெறி நாய் கடித்தால் உண்டாகும் ரேபிஸ் நோய் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. மேலும் குரல் எழுப்பும் தசைகளையும் இறுக்கும். இதனால் வெறிநாய் கடித்தவர்களின் குரல் நாய்கள் குரைப்பதை போல மாறிவிடுகிறது. அதோடு வலி, சோர்வு, பயம், தூக்கமின்மை, தண்ணீரைக் கண்டால் பயம் ஆகிய அறிகுறிகளும் காணப்படும். ரேபிஸ் நோய் முற்றினால் குணமாக்க மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்த சென்ற வழக்கறிஞர் (சத்தியசீலன்) உள்பட 5 பேரை கடித்தைதை போன்று மேலும் பலரை நாய்கள் கடிக்கும் முன் விரைவான நடவடிக்கை எடுக்கவும், மேலும், வளர்ப்பு நாய்களுக்கு உரிய அனுமதி பெற்று, வளர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 05:57:03
Privacy-Data & cookie usage: