5th-Anniversary Commemoration Day of Artist Karunanidhi with Garland Tribute: District Secretary Rajendran Report!

பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலும், அரசியல் களத்திலும், சட்டமன்ற ஜனநாயகத்திலும், மகத்தான சாதனைகள் படைத்து பன்முக ஆற்றலை தன்னகத்தை பெற்றிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள் என்பது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மக்கள் நினைவில் நிலை கொண்டிருப்பவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் 5- முறை தமிழகத்தின் முதலமைச்சராகவும் இருந்து தந்தை பெரியாருடைய சமூக நீதிக் கொள்கைக்கும், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய உயர்ந்த ஜனநாயக கோட்பாடுகளுக்கும், சட்ட வடிவம் தந்து ,தற்போது தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிக் கொண்டிருக்கின்ற, தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை கொடுத்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் தான் என்பது வரலாற்று பதிவாகும்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரது கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை மனதிலும் தோளிலும் தமது வாழ்நாள் முழுவதும் சுமந்து சமுதாயத்திற்கும், மனித நேயத்திற்கும், சமூக நீதிக்கும் பல்வேறு நலிந்தவர்களின் வாழ்க்கை தரம் உயருவதற்கும், வாழும் வள்ளுவனாக சமத்துவ பெரியாராக வாழ்ந்து காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர். இன்றைய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, கலைஞர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செயல்படுத்த அடித்தளம் அமைத்துக் கொடுத்த செம்மொழி காவலர் கலைஞர் ஆவார்.

எத்தனையோ சமூக நீதிக்கான திட்டங்களை ஏழை, எளியவர்களுக்கு என பல்வேறு நலத்திட்டங்களை தன்னுடைய ஆட்சி காலத்திலேயே உருவாக்கி, நடைமுறைப்படுத்தி இந்திய துணை கண்டத்திற்கு கலங்கரை விளக்கமாக செயல்பட்ட அந்த தன்னிகரில்லா தலைவரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் வரும் (07.08.2023) திங்கட்கிழமை அன்று கடைபிடிக்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும், பெரம்பலூர் மாவட்ட அனைத்து நிர்வாகிகளும், கழக செயல் வீரர்களும் அமைதி ஊர்வலமாக சென்று தமிழினத் தலைவர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!