6 ஆயிரம், மதிப்புள்ள மதுப் புட்டிகள் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

schedule
2016-05-08 | 16:38h
update
2026-05-01 | 20:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் அருகே டூவீலரில் கொண்டு வரப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கிருஷ்ணாபுரம் – வெண்பாவூர் செல்லும் சாலையில் வட்ட வழங்கல் அலுவலர் பழனிச்செல்வம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு இரு சக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்ட போது பாண்டகபாடி கிராமத்தை சேர்ந்த சுந்தரம் மகன் இளவரசன் என்பவர் 6 ஆயிரத்து 140 ரூபாய் மதிப்பிலான 62 மது புட்டிகளை சட்ட விரோதமாக கொண்டு சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் . பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு போலீசாரிடம் இளவரசனை ஒப்படைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 20:22:44
Privacy-Data & cookie usage: