பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு!

schedule
2024-06-23 | 15:33h
update
2024-06-23 | 15:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

6 pounds of jewelery stolen by breaking the lock of a house near Perambalur!

பெரம்பலூர் அருகே விவசாயி ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்த அங்கமுத்து மகன் துரைராஜ் (70). விவசாயி. இவர் நேற்று தனது வயலில், சின்ன வெங்காயத்திற்கு மருந்து தெளிக்கும் பணிக்காக வீட்டை பூட்டி விட்டு அவரது மனைவியுடன் சென்றார். விவசாய பணி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் , கைரேகை நிபுணர்கள் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்னர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.08.2026 - 06:24:58
Privacy-Data & cookie usage: