அம்பேத்கரின் 62வது நினைவு தினம்: பெரம்பலூரில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை

schedule
2018-12-06 | 06:50h
update
2026-07-06 | 09:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

62nd anniversary of Ambedkar: The DMK, and Congress, including the parties in respect of garlands in Perambalur his Statue

இன்று சட்ட மாமேதை அம்பேத்கரின் 62வது நினைவு நாளை முன்னிட்டு, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு திமுக கட்சியினர், மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement

அப்போது, மாவட்ட பொருளாளர் வாலிகண்டபுரம் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் துரைசாமி, வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், செந்தில்நாதன், மாரிக்கண்ணன், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் நல்லத்தம்பி, வேப்பந்தட்டை ஜெகதீசன், பாடாலூர் சோ.மதியழகன், நகர செயலாளர் ம.பிரபாகரன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அரணாரை ஜெய்க்குமார், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் செ.வல்லபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் வக்கீல் த.தமிழ்ச்செல்வன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதே போன்று, பின்னர், பாஜக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அம்பேத்கர் வாழ்க! என கோசமிட்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 09:41:30
Privacy-Data & cookie usage: