7 ஆடுகள் பலி! மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை கண்டுபிடிக்க கோரி இறந்த ஆடுகளை வைத்து பெரம்பலூர் அருகே சாலைமறியல்!

schedule
2022-09-08 | 18:11h
update
2022-09-09 | 10:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

7 goats killed! Roadblock near Perambalur with dead goats demanding to find the lorry that crashed and stopped!

பெரம்பலூர் அருகே உள்ள களரம்பட்டி கிராமத்தில், 8 ஆடுகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவர் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, இறந்த ஆடுகளை சாலையின் குறுக்கே போட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்:

Advertisement

களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (45) அரசு பேருந்து ஓட்டுனராக உள்ளார். இவருக்கு சொந்தமாக 8 ஆடுகள் உள்ளன. பரமசிவத்தின் மனைவி தனலட்சுமி (30) ஆடுகளை மேய்த்து விட்டு பட்டியில் அடைப்பதற்காக ஓட்டிச் சென்றார். சாலையை ஆடுகள் கடந்து கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக துறையூர் – பெரம்பலூர் நோக்கி வந்த சிமெண்ட் பல்கர் லாரி ஆடுகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் 7 ஆடுகள் சம்பவ இடத்தில் பலியானது. ஒரு ஆடு காயம்பட்டது.

இதை கண்ட அப்பகுதியினர் ஒன்று திரண்டு, ஆடுகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இறந்த ஆடுகளை சாலையின் குறுக்கே போட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உரிய எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அப்பகுதியினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தப்பி சென்ற லாரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 08:58:42
Privacy-Data & cookie usage: