70th birthday party of Chief Minister M.K.Stalin! Celebrate with excitement Perambalur DMK District Secretary Kunnam C. Rajendiran Notice!

திமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளரும்-பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான குன்னம் சி. இராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக தலைவரும், , திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின், கழகத்தில் கழக அடிப்படை உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர், இளைஞர் அணிச் செயலாளர், கழகத் துணைச் செயலாளர், கழகப் பொருளாளர், கழகத் துணைத் தலைவர், கழகத் தலைவர், என்றும், பொது வாழ்வில் சென்னை மாநகர மேயர், சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு துணை முதலமைச்சர், முதலமைச்சர் என்று உழைப்பால் உயர்ந்து, முத்தமிழ் அறிஞர் கலைஞர் , ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு என்று பாராட்டு பெற்ற, நமது திமுக தலைவர் தளபதியின் 70-வது பிறந்த நாள் வரும் மார்ச் 1ம் தேதி அன்று கட்சியினரால் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகள், வார்டுகள் தோறும் மார்ச் 1ம் தேதி அன்று மற்றும் மார்ச் மாதம் முழுவதும் கழகக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு பேனா, புத்தகங்கள் வழங்கி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, மரக்கன்றுகள் வழங்கியும், மரக்கன்றுகள் நட்டும், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கியும்,கழகத் தலைவர் மு. க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கழகத்தினருக்கு கழகத்த்தலைவர் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை சிறப்பாக கொண்டாடிட அறிவுறுத்த வேண்டும். கழகத் தலைவர் தளபதி அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில், சட்டமன்ற உறுப்பினர், மாநில, மாவட்ட, நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக மூத்த முன்னோடிகள், கழக செயல் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்திட வேண்டும்.

மேலும் கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுவர் விளம்பரங்கள் செய்திட வேண்டும். அந்த சுவர் விளம்பரங்களில் திமுக அரசின் சாதனைகளையும் எழுத வேண்டும். மேலும் சென்னையில் நடைபெறும் அகில இந்திய அளவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்திலும் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும், அதில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!