72வது குடியரசு தினம்; பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

schedule
2021-01-26 | 04:55h
update
2021-01-26 | 04:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

72nd Republic Day; Perambalur Collector Venkata Priya paid Honour by hoisting the national flag

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 72வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு, கலெக்டர் வெங்கட பிரியா இன்று தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொரோனா வைரஸ் (கோவிட் 19) நோய் தடுப்பு பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 74 அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 23 காவலர்களுக்கு தமிழக முதலமைச்சரின் பதக்கங்களையும் வழங்கி சிறப்பித்தார்.

குடியரசு தின விழா கொண்டாடுதல் குறித்து அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் கிருமிநாசினி மற்றும் முக கவசம் அணிந்துள்ளதை உறுதி செய்யப்பட்டது.

Advertisement

தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு, சுதந்திர போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் நேரடியாக விழாவில் கலந்து கொள்வதினால் ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு, இவ்விழாவினை நேரடியாக கலந்துகொள்வதை தவிர்த்திட அரசு அறிவுறுத்தியுள்ள நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவப்படுத்தும் விதமாக வட்டாட்சியர் நிலை மற்றும் வட்டார வளர்ச்சி நிலையிலான அலுவலர்களால் சுதந்திர போராட்ட தியாகிகளின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து பொன்னாடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பு பணியில் முன் கள பணியாளா;களாக சிறப்பாக செயல்பட்ட காவல் துறையைச் சோ;ந்த 12 நபர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையை சார்ந்த 4 நபர்களுக்கும், விளையாட்டுத்துறையை சேர்ந்த 3 நபர்களுக்கும், பெரம்பலூர் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த 1 நபருக்கும், தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 1 நபருக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையை சேர்ந்த 8 நபர்களுக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையைச் சேர்ந்த 15 நபர்களுக்கும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறையைச் சேர்ந்த 3 நபர்களுக்கும், வருவாய்த்துறையைச் சேர்ந்த 6 நபர்களுக்கும், மாவட்ட தொழில் மையத்தைச் சேர்ந்த 1 நபருக்கும், கால்நடை பராமரிப்புத் துறையை சேர்ந்த 1 நபருக்கும், ஊரக வளர்ச்சித்துறையைச் சேர்ந்த 4 நபர்களுக்கும், ஊராட்சிகள் துறையைச் சேர்ந்த 1 நபருக்கும், பேரூராட்சிகள் துறையைச் சேர்ந்த 5 நபர்களுக்கும், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையை சேர்ந்த 5 நபர்களுக்கும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 2 நபர்களுக்கும், செய்தி மக்கள் தொடர்புத்துறையைச் சேர்ந்த 2 நபர்களுக்கும் என ஆக மொத்தம் 74 நபர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் போலீஸ் எஸ்.பி நிஷா பார்த்திபன், , டி.ஆர்.ஓ. ராஜேந்திரன், சப்-கலெக்டர் பத்மஜா, டி.ஆர்.டி.ஏ இயக்குனர் லோகேஸ்வரி, கலெக்டர் (பொது) பி.ஏ. சுப்பையா, சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர் சக்திவேல், சி.இ.ஓ. மதிவாணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2026 - 22:01:22
Privacy-Data & cookie usage: