பெரம்பலூர், ஆல்மைட்டி வித்யாலயா பள்ளியில் 75 வது சுதந்திர தினவிழா: போதை விழிப்புணர்வு பேரணி: எம்.எல்.ஏ பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

schedule
2022-08-15 | 21:30h
update
2026-06-17 | 14:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

75th Independence Day Celebration and Drug Awareness Rally at Perambalur Almighty Vidyalaya School: MLA Prabhakaran inaugurated.

Advertisement

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளியில் 75 வது சுதந்திர தின அமுதபெருவிழா, பள்ளி தாளாளர் ஆ.ராம்குமார் தலைமையில் நடைபெற்றது. பள்ளி முதன்மை செயலர் செந்தில்குமார் வரவேற்றார். பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் கலந்து கொண்டு கொடியேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர், மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறுவாச்சூர் கோயில் வளைவு பகுதியிலிருந்து மதுரகாளியம்மன் கோயில் வரை 75வது சுதந்திர தினத்தையொட்டி போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் துய்மை பாரதம், பசுமை இந்தியா குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி முதல்வர் ஹேமா மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 14:08:42
Privacy-Data & cookie usage: