பெரம்பலூர் அருகே மகனை அடித்து கொன்ற பெற்றோர் உள்பட 8 பேர் கைது !

schedule
2020-05-29 | 14:13h
update
2020-05-29 | 14:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

8 arrested for beating his son killed, including at plea to parents!

பெரம்பலூர் அருகே மகனை அடித்துக் கொன்ற பெற்றோர் உட்பட 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பாண்டகபாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி-சரஸ்வதி தம்பதியரின் மூத்த மகன் முத்தையன்(30), கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் திரும்பிய இவருக்கு கடந்த சில வருடங்களாக மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டதால் அதனை பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் அளவுக்கதிகமாக மது குடித்து விட்டு வந்த முத்தையனக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதாக தெரிகிறது.

Advertisement

இந்த நிலையில் பாண்டகபாடியிலிருந்து வெண்பாவூர் செல்லும் சாலையில் கருப்பையா கோவில் பகுதியில் கழுத்தில் லுங்கியால் இறுக்கிய நிலையில் முத்தையன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் அளித்த தகவலின்பேரில் விகளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்து கிடந்த முத்தையனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெற்றோரிடம் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து வீட்டை சென்ற முத்தையன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

இதனால் சந்தேகமடைந்த வி. களத்தூர் போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக பையனின் தாய் தந்தையர் பிரிந்து தனி தனியே வசித்து வந்ததாகவும் தாய் தந்தையுடன் வசித்து வந்த முத்தையன் வெளிநாட்டில் வேலை பார்த்தபோது அனுப்பிய பணத்தை கணக்கில் கேட்டதால் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பெற்றோர் உள்ளிட்ட அவரது உறவினர்கள் சிலர் சேர்ந்து முத்தையனை லுங்கியால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து முத்தையனின் தந்தை ராமசாமி, தாய் சரஸ்வதி மற்றும் அதே ஊரை சேர்ந்த உறவினர்களான கருப்பையா (21 )சின்னையன்( 30 )ஞானப்பிரகாசம் (28 )மணிகண்டன் (20) சூர்யா (14 )வீரமணி (27 )ஆகிய எட்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற மகனை அவரது பெற்றோர்களே உறவினர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கி லுங்கியால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 07:12:06
Privacy-Data & cookie usage: