பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி 8 ஆண்டுகள்: மக்கள் நலனுக்கு136 திட்டங்கள் நிறைவேற்றம்

ரமேஷ் சிவா!

schedule
2022-06-02 | 20:31h
update
2022-06-03 | 04:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

8 years of BJP rule led by Prime Minister Modi: 136 projects implemented for the benefit of the people: State Youth Leader Ramesh Siva informed!

 

பெரம்பலூர்:

பாஜக கட்சியின் 8 ஆண்டுகால ஆட்சியில் மக்களின் நலனுக்காக 136 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா தெரிவித்தார்.


பெரம்பலூரில் மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 8 ஆண்டுகள் ஆகிறது, மக்களின் நலன்கருதி 136 திட்டங்கள் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்திற்கு அதிகளவிலான பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். இதன்படி தமிழகத்தில் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 7 லட்சத்து 45 ஆயிரம் வீடற்றவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை 3 லட்சத்து 44 ஆயிரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறத்தில் 7 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 56 லட்சம் தனிநபர் இல்ல கழிவறை கட்டப்பட்டுள்ளது. ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் 33 லட்சம் வீடுகளுக்கு வீட்டிற்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகள் கடனுதவி திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

பிரதமர் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் 46 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இதில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 26 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. ஜன்தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டு ஒரு கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 373 கோடி பரிமாற்றம் நடந்துள்ளது. உலக அளவில் இத்திட்டம் செயல்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் தேசிய நெடுஞ்சாலையில் 6 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரை என 78 லட்சம் பேருக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி திட்டத்தின் 11 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முதலாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. 16 மருத்துவக்கல்லூரி கொண்டுவரப்பட்டுள்ளது. உஜ்வலா யோஜனா திட்டத்தின் கீழ் 35 லட்சம் பேருக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்
பட்டுள்ளது.

இது போன்ற எண்ணற்ற திட்டத்தின் கீழ் மக்கள் பயன்பெற்று வருகிறனர். இதுவரை யாரும் செய்யமுடியாத திட்டங்களை மக்களுக்ககாக செயல்படுத்தியவர் தான் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு அவர்கள் செய்தாக மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனவே மத்திய அரசின் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 19:47:16
Privacy-Data & cookie usage: