சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளியில் 9வது ஆண்டு விழா!

schedule
2023-12-24 | 14:18h
update
2023-12-24 | 14:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

9th Anniversary Celebration at Siruvachur Almighty Vidyalaya School!

பெரம்பலூர் அடுத்துள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் 9 வது ஆண்டு விழா, சேர்மன் டாக்டர் ஆ.ராம்குமார் தலைமையில் நடந்தது. முதல்வர் சந்ரோதயம் வரவேற்றார்.

Advertisement

சோழன் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் ஜி.குமார் வாண்டையார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பிள்ளைகள் என்னவாக ஆக வேண்டும் என நினைக்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்தி அதற்கு ஊக்கப்படுத்தும் விதமாக முடிவு செய்ய வேண்டும். இன்றைக்கு சாப்ட்வேர் துறையில் சம்பாதிப்பவர்களை காட்டிலும், விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்களும் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள். எனவே, பெற்றோர்களின் ஆசைகளை கட்டாயமாக பிள்ளைகள் மீது திணித்தால் பிள்ளைகளின் ஆர்வம் குறைந்து விடும் என தொpவித்தார்.

ஆல்மைட்டி பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பில் கடந்த ஆண்டு முதல் மதிப்பெண் பெற்ற ரவிராஜ் என்ற மாணவருக்கு ரூபாய் பத்தாயிரத்து ஒன்றும் +2வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி வி.என்.ஹரிணிக்கு பன்னிரண்டு ஆயிரத்து ஒன்றும் பரிசாகவும் வழங்கப்பட்டது. பள்ளி பள்ளி வைஸ்-சேர்மன் சி.மோகனசுந்தரம், செயலாளர் ஆர். சிவக்குமார், மேலமாத்தூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி தாளாளர் டி.ஜி.பழனிவேலு பள்ளியின் பங்குதாரர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 20:53:42
Privacy-Data & cookie usage: