நாமக்கல் மாவட்டம், லாரி மீது டூ வீலர் மோதி விபத்து 5 வயது சிறுவன் பலி

schedule
2018-12-19 | 14:16h
update
2026-04-23 | 14:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A 5-year-old boy kills a motorcycle accident on the truck in Namakkal district

பரமத்தி வேலூர் அருகே லாரி மீது டூ வீலர் மோதிய விபத்தில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Advertisement

நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 23), இவர் தனது வீட்டுக்கு வந்த சகோதரியின் மகன் லோகித்-தை (5), பஞ்சபாளையத்தில் உள்ள சகோதரியின் வீட்டில் விடுவதற்காக தனது டூவீலரில் அழைத்துச் சென்றார். பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகம் அருகே சென்ற போது, முன்னால் சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் லோகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். டூவீலரை ஓட்டிவந்த சவுந்தர்ராஜன் படுகாயமடைந்து நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2026 - 14:15:39
Privacy-Data & cookie usage: