பெரம்பலூர் அருகே பஸ் லாரி மோதிய விபத்து ! 2 பேர் பலி! 12 பேர் காயம்!

schedule
2022-07-30 | 04:58h
update
2022-07-30 | 05:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A bus truck collided with an accident near Perambalur! 2 people died!

பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை லாரி மீது பஸ் மோதிய விபத்தில் பஸ் டிரைவர் கண்டக்டர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், 12 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு பஸ் ஒன்று சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தது.பஸ்சை திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பெருவளப்பூர் பரசுராமன் மகன் தேவேந்திரன் (48) ஓட்டி வந்தார்.கண்டக்டராக அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள அய்யப்பநாயக்கன்பேட்டை கிராமத்தை சேர்ந்த சிவப்பிரகாசம் மகன் முருகன் (56) என்பவரும் இருந்தார்.

பஸ் இன்று அதிகாலை 4.30 மணி அளவில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள சர்க்கரை ஆலை எறையூர் -சின்னாறு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, முன்னே திருச்சிக்கு இரும்பு குழாய்களை ஏற்றி சென்ற, லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், பஸ்சை ஓட்டி வந்த திருச்சி தீரன் நகர் பஸ் டெப்போவை சேர்ந்த டிரைவர் தேவேந்திரன், கண்டக்டர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பஸ்சில் வந்த சுமார் 12 பயணிகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் மற்றும் பெரம்பலூர் தீயணைப்பு மீட்புபடையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, அவர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பஸ்சின் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர், கண்டக்டர் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். வழக்குப் பதிவு செய்த மங்களமேடு போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.06.2026 - 19:48:45
Privacy-Data & cookie usage: