நாமக்கல் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தீவனம் எரிந்து நாசம்

schedule
2018-05-13 | 19:51h
update
2026-04-18 | 22:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A fire broke out at a fire near Namakkal in the cattle feed at a cost of Rs.1 lakh

நாமக்கல் அருகே ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. ஒரு லட்சம் கால்நடைத்தீவனம் தீயில் எரிந்த நாசமானது.

Advertisement

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகில் உள்ள மாதேசம்பாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (50). இவர், தன் தோட்டத்தில் விளைந்த சோளத்தட்டுக்களை கால்நடைத் தீவனத்திற்கு இரண்டு போர்கள் அமைத்துள்ளார்.

சம்பவத்தன்ற ஒரு சோளத்தட்டுப் போரில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. காற்று அடித்ததால் தீ வேகமாக பரவி அருகில் இருந்த சோளத்தட்டுப்போரும் தீயில் எரிந்தது.

இது குறித்து தகவல் கிடைத்ததும், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இருப்பினும், இரண்டு சோளத்தட்டு போர்களும் முழுவதும் எரிந்து நாசமானது. எரிந்துபோன கால்நடை தீவனத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். தீ விபத்திற்கான காரனம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

Tags: Erode, Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2026 - 22:46:30
Privacy-Data & cookie usage: