பெரம்பலூர் அருகே பூட்டிய வீட்டில் ரூ. 50 ஆயிரம் 5 பவுன் தங்க நகைகள் கொள்ளை: போலீசார் விசாரணை!

schedule
2021-04-28 | 07:23h
update
2021-04-28 | 07:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A locked house near Perambalur cost Rs. 50 thousand 5 pound gold jewelery robbery: Police investigation!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் காலனி பகுதியை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் சென்னையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் டிரைவாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிராமி (வயது 22), கர்ப்பிணியான சிறுவாச்சூரில் தங்கி உள்ளார், அருகே தாய் வீடு உள்ளதால் அங்கே தங்கி இருந்து வந்துள்ளார். இன்று காலை 7.30 மணிக்கு அபிராமியின் அண்ணன் அருண் வந்து வீட்டை பார்த்த போது தங்கையின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை தெரிவித்துள்ளார். பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டினுள் இருந்த ரொக்கம் ரூ.50 ஆயிரம், எல்.இ.டி டிவி. ஒன்றும், அரை பவுன் மதிப்புள்ள 2 தங்க மோதிரம், 3 பவுன் தங்க சங்கிலி, 1 பவுன் செயின் என மொத்தம் 5 பவுன் தங்கநகைகளை கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார், மோப்ப நாய், தடய அறிவியல் நிபுணர்களை கொண்டு கொள்யைர்களின் தடயங்களை கொண்டு அடையாளம் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்பபடுத்தியது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 17:35:41
Privacy-Data & cookie usage: