பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி, பெரம்பலூர் அருகே நடந்தது: கலெக்டர் கலந்து கொண்டார்.

schedule
2022-09-01 | 16:01h
update
2022-09-01 | 16:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A model drill on disaster preparedness measures was held near Perambalur: Collector attended.

பெரம்பலூர் அருகே லாடபுரம் சின்ன ஏரியில் பேரிடர் மேலாண்மை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மூலம் பருவமழை காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் வெங்கட பிரியா முன்னிலையில் நடைபெற்றது.

விளம்பரம்:

இதே போன்று, வேப்பந்தட்டை வட்டம் திருவாளந்துறை, குன்னம் வட்டம் வேள்விமங்களம் ஆலத்தூர் வட்டம் சிறுகன்பூர் கிழக்கு மற்றும் கொட்டரை ஆகிய 5 இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

தென்மேற்கு பருவமழை காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், பேரிடர் மேலாண்மை மற்றும் அவசர கால மீட்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானதாக உள்ளதால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீயணைப்புத் துறையின் மூலம் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது,

அதனடிப்படையில் தீயணைப்புத்துறையின் மூலம் ஏரி, குளம் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகு (ஒரே சமயத்தில் 10 நபர்களை மீட்கும் திறன் கொண்டது), மீட்பு பணியின் போது 100 மீட்டர் சுற்றளவிற்கு வெளிச்சம் தரவல்ல உயர் கோபுர விளக்கு, உயிர்காக்கும் மிதவை மற்றும் உயிர்காக்கும் உடை (லைஃப் ஜாக்கெட்), இரும்பு பொருட்களை வெட்ட வல்ல ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி(ஸ்பெரட்டர் மற்றும் கட்டர்), மிதவை பம்பு (வெள்ள காலத்தில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற), விபத்து நேரங்களில் வாகனங்களின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்க உதவும் (ஏர் லிப்டிங்) ஆகிய பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு அவற்றின் இயக்கம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

விளம்பரம்:

வெள்ள நேரங்களில் பொது மக்களை காப்பாற்ற, தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத் துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றி அவர்களை அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு பல்வேறு முறைகளை பின்பற்றி அழைத்துச் செல்வது குறித்த செயல்விளக்கம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பால்பாண்டி, தாசில்தார் கிருஷ்ணராஜ் மற்றும் தீயணைப்புத் துறை பணியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 17:01:25
Privacy-Data & cookie usage: