நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்து மனைவி, மகள் பலி; கணவர் காயம்

schedule
2019-01-20 | 17:31h
update
2019-01-20 | 17:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A motorcycle accident near Namakkal killed wife and daughter; Husband hurt

மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்ததால் தாய், மகள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, வளப்பூர்நாடு, பள்ளத்துவளவு கிராமத்தைச் சேர்ந்தவர் உமாசங்கர் (35). இவர் அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்டத்தில் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சசிகலா (29), மகள் இந்துஜா(12). இவர் நாமக்கல் ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். மகளின் படிப்புக்காக, நாமக்கல்லில் வாடகை வீட்டில் குடியிருந்துவந்த உமாசங்கர், பொங்கல் பண்டிகைக்காக கொல்லிமலை சென்றுவிட்டு, சம்பவத்தன்று மதியம் மோட்டார் சைக்கிளில் மனைவி, மகளுடன் நாமக்கல் திரும்பினார்.

சேந்தமங்கலம் அருகே வெண்டாங்கி என்ற இடத்தில் வரும்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. அப்போது எதிரில் வந்த மினி வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் படுகாயமடைந்தனர்.

சசிகலா சம்பவ இடத்திலேயும், இந்துஜா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். உமாசங்கர் நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 03:16:22
Privacy-Data & cookie usage: