பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் சாவு! 3 நாட்களுக்கு பிறகு தெரிய வந்தது!!

schedule
2022-08-13 | 06:40h
update
2022-08-13 | 06:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A person who fell into a well near Perambalur died! It came to light after 3 days!!

பெரம்பலூர் அருகே குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த கொத்தனார் இறந்தார்.

பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் கிராமத்தை சேர்ந்தவர் ரவியின் மகன் ராஜ்குமார் (23), இன்று காலை தனது வயலுக்கு சென்ற போது, கிணற்றை எட்டி பார்த்த போது, தனது தந்தை ரவி கிணற்றி இறந்து தண்ணீர் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து உறவினர்களுக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தார்.

Advertisement

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரவியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன ரவிக்கு மனைவி தனலட்சுமி, 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

கொத்தனார் வேலை செய்து வந்த ரவிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும் கடந்த ஆக.10 மதியம் 1.30 மணிக்கு தன் வீட்டில் இருந்து புறப்பட்டவர் பின்பு வீடு திரும்பவில்லை என்றும், ஏற்கனவே ரவி குடிபோதையில் வீட்டை விட்டு சென்றால் இரண்டு, மூன்று நாட்கள் வீட்டிற்கு வர மாட்டார் என்பதால் வீட்டில் உள்ளவர்கள் தேடாமல் இருந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 09:51:32
Privacy-Data & cookie usage: