A project to set up a solar power plant for farmers and water pumps with free electricity connection; Perambalur Collector
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
PM-KUSUM திட்டத்தின் கீழ் இலவச மின் இணைப்புடன் கூடிய நீர் இறைப்பான்களுக்கு சூரிய மின் நிலையம் அமைக்கக 7.5 HP வரைக்குமான மோட்டார்களுக்கு மத்திய அரசு மானியம் 30%, மாநில அரசு மானியம் 30% என மொத்தம் 60% மானியம் வழங்கப்படும். மீதமுள்ள 40 சதவீதத்தில் 10 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பு போக மீதமுள்ள தொகைக்கு வங்கிக் கடனுதவிப் பெற்றுக்கொள்ளலாம்,
முதல் கட்டமாக தமிழக அரசு மாநிலம் முழுவதும் 20,000 இலவச மின் இணைப்புடன் கூடிய மின் மோட்டார்களுக்கு இத்திட்டமான சூரிய மின் நிலையம் அமைக்க முனைந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்க கிடைக்கும் வருமானம். (உதாரணமாக 7.5HP மோட்டாருக்கு), 11 Kwp சோலார் பேனல் பொருத்துவதன் மூலம் ஒருவருடத்திற்கு 14850 யூனிட் மின் உற்பத்தி பெறலாம். சூரிய மின் சக்தியின் உற்பத்திக்கு அரசு கொடுக்கும் தொகை ரூ.2.28/- யூனிட் வழங்குவதன் மூலம் வருடத்திற்கு விவசாயிக்கு வருமானம் தோராயமாக ரூ.33,858/- பெறலாம். மின் வாரிய மின் கட்டமைப்புக்கு செலுத்தப்பட்ட மின் ஆற்றலின் அளவுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.0.50/- யூனிட் ஆகும்.
ஒரு வருடத்தில் விவசாயி இத்திட்டத்தின் ஊக்கத்தெகை மூலம் கிடைக்கப் பெறுகின்ற வருமானம் (ஒரு நாளைக்கு 25 யூனிட் மூலமாக) ரூ.3,750/- ஆகும். ஒரு வருடத்தில் விவசாயி பெறுகின்ற வருமானம் தோராயமாக ரூ.40,000.00 ஆகும். சூரிய ஒளி மின்னுற்பத்தி சாதனம் முழுமையாக பயன் தரும் ஆண்டுகள்:25 ஆண்டுகள் ஆகும்.
உதாரணமாக 7.5 HP மோட்டாருக்கு 11 Kwp சூரிய மின்சக்தி சாதனத்தை அமைப்பதற்கான செலவு தொகை தோராயமாக ரூ.5,00,000-. மத்திய அரசு வழங்கும் 30% மானியம் ரூ.1,50,000, மாநில அரசு வழங்கும் 30% மானியம் ரூ.1,50,000. விவசாயிகளின் முதலீடு தோராயமாக ரூ.2,00,000. விவசாயி முதலீட்டு தொகையை திரும்பப்பெற எடுத்துக்கொள்ளும் ஆண்டுகள் தோராயமாக 5 ஆண்டுகள் ஆகும். தடையில்லா மும்முனை மின்சாரம் பெற்றிட முடியும், அடிக்கடி பழுதடையும் மின்மோட்டார் செலவு குறைக்கப்படுகிறது. ஐந்து வருட இலவச பராமரிப்பு வழங்கப்படும்.
மானியம் பெற தகுதியுடைய விவசாயிகள் அதிகபட்சமாக 7.5 HP வரை உள்ள இலவச மின் இணைப்புடன் கூடிய நீர் இறைப்பான்களுக்கு இத்திட்டம் பொருந்தும். இத்திட்டத்தினைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு உதவி பொறியாளர் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தை 9385290534 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.