பெரம்பலூரில் தி.மு.க. வேட்பாளர்கள், வாக்கு சாவடி முகவர்களுக்கு, ஆ.இராசா எம்.பி ஆலோசனை!

schedule
2020-01-01 | 17:53h
update
2020-01-01 | 17:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A.Raja MP advises to DMK at Perambalur Candidates, polling agents

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர்கள் மற்றும் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்- கழக கொள்கை பரப்பு செயலாளர் ஆ. இராசா எம்.பி.கலந்து கொண்டு, பேசுகையில், வாக்கு எண்ணிக்கையின் போது காலை முதல் மாலை வரையில் வேட்பாளர்கள் மற்றும் வாக்கு சாவடி முகவர்கள் விழிப்புடன் இருந்து ஆளும் கட்சியினரின் சதியை முறியடித்து தி.மு.க.வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்.

Advertisement

இதில் தேர்தல் பணிக்குழு செயலாளர் வேளச்சேரி மணிமாறன், மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்விராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் க.நடராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் நூருல்ஹிதா இஸ்மாயில், தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செ. இரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.அண்ணாதுரை, எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ. ஜெகதீசன், சி.ராஜேந்திரன், நகர செயலாளர் எம். பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து. ஹரிபாஸ்கர் மற்றும் மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துனை அமைப்பாளர்கள் , உள்ளாட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ,பூத், ஏஜெண்டுகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.08.2026 - 09:32:20
Privacy-Data & cookie usage: