ஆ.இராசா எம்.பி தான் பயின்ற பள்ளிக்கு ரூ.80 லட்சத்தில் புதிய கட்டிடம்; கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்!

schedule
2026-10-15 | 18:24h
update
2026-10-15 | 18:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A. Raja MP initiates construction work for a new building at his former school, funded with Rs. 80 lakh!

திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பியுமான ஆ.ராசா, பெரம்பலூர் அருகே தான் பயின்ற ஆரம்ப பள்ளிக்கு ரூ. 80 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் அருகே உள்ள வேலூரில், ஆ.இராசா ஆரம்ப கல்வியை அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் பயின்றார். அந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் பி. வில்சன் ரூ. 37 லட்சமும், ராஜாத்தி (எ) சல்மா ரூ. 47 இலட்சமும் ஆ.ராசா எம்.பி முயற்சியால் வழங்கினர். அதற்கான கட்டுமாக முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பியுமான ஆ. இராசா எம். பி., கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர், அங்கிருந்த பள்ளி மாணவர்களிடம் ஆ.இராசா எம்.பி தான், இந்த பள்ளியில் பயின்றுதாகன் இந்திய பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து ஜனநாயக உரிமைக்கு பேசுவதாகவும், உறுதியுடன் படிக்கவும் அங்கிருந்த மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். ஆசிரியர் பச்சமுத்து, பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், முன்னாள் பெரம்பலூர் எம்.எல்.ஏ ம.பிரபாகரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா. ப. பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளரும், ஒப்பந்தாருமான தழுதாழை பாஸ்கர், மாவட்ட மருத்துவ அணி தலைவர் எஸ். டி. ஜெயலெட்சுமி, வேப்பூர் முன்னாள் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை திமுக ஒன்றிய செயலாளர்கள் வேப்பூர் சி.ராஜேந்திரன், வேப்பந்தட்டை நல்லதம்பி , பேரூர் செயலாளர்கள், மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள், பெரம்பலூர் நகராட்சி துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், இந்நாள் மாணவர்கள் மற்றும் வேலூர் சிவசண்முகம், தம்பை தர்மராஜ், திமுக மகளிரணி மகாதேவி ஜெயபால், அரணாரை ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.10.2026 - 18:43:02
Privacy-Data & cookie usage: