A resolution was passed at a VCK meeting to hold a public meeting in Perambalur to explain the resolutions of the Tamil Nationalist Resurgence Conference.
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட விசிக ஆலோசனை கூட்டம் கட்சியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் பெரம்பலூரில் நடந்தது. ஆலோசனை மேற்கு நகர செயலாளர் தங்க. இளவரசன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பிச்சை பிள்ளை, மாவட்ட செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் அ.இ.அழகுமுத்து, மாவட்ட துணைச் செயலாளர்கள் தங்க.சண்முகசுந்தரம், அய்யாக்கண்ணு, வெற்றியழகன், இடி முழக்கம், சங்கீதா, கேட் மணி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தழுதாழை பாலு, ஸ்டாலின் லால், காட்டு ராஜா, பாக்கியராஜ் மற்றும் இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறை மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் அய்யம்பெருமாள் அன்னலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அக்டோபர் 15 அன்று தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டின் தீர்மான விளக்க பொது கூட்டம் பெரம்பலூரில் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மண்டல துணை செயலாளர் மன்னர் மன்னன், முன்னாள் மாவட்ட செயலாளர் பால்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகவும், ஒன்றிய செயலாளர்கள் மாஸ்மணி, மதியழகன், சதீஷ்குமார், செந்தில் வளவன், ராதாகிருஷ்ணன், வடிவேல் பழனிமுத்து, வெற்றிவேல், கவியரசன், வினோத் மற்றும் பேரூர் செயலாளர்கள் சுரேஷ்குமார், விஜயவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிழக்கு நகர செயலாளர் சரண்ராஜ் நன்றி கூறினார்.