பெரம்பலூர் தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்!

schedule
2026-01-11 | 04:45h
update
2026-01-11 | 04:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A resolution was passed at the executive committee meeting to allocate the Perambalur constituency to the VCK.

பெரம்பலூர் 4 ரோடு அருகே விசிக வின், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ந.கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது. தங்க. சண்முகசுந்தரம் வரவேற்றார். மண்டலச் செயலாளர் ரா.ஸ்டாலின், மாநில செயலாளர் வீரசெங்கோலன், துணை மண்டலச் செயலாளர் லெனின் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நகர செயலாளர் தங்க.சண்முகசுந்தரம் வரவேற்றார். வெற்றியழகன், இடிமுழக்கம், பிச்சைபிள்ளை, அய்யாக்கண்ணு, மணிகண்டன், செல்லபாண்டியன் கேட் மணி, தயாளன், குரும்பலூர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

கூட்டத்தில், நாடு முழுவதும் கிறித்துவர்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் சங்பரிவார் கும்பலை வன்மையாக கண்டித்தும், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் மாவட்ட செயலாளராக ந.கிருஷ்ணகுமார், மாவட்ட செய்தித் தொடர்பாளராக வழக்கறிஞர் அழகுமுத்து ஆகியோரை நியமித்த தலைவர் தொல். திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்தும், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கும் பயணிகளுக்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியும், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு அவற்றை நிலமில்லாத பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும், தலைவரின் கனவு திட்டமான ‘வேர்களைத் தேடி பயணம்’ செயல்வடிவம் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கும் படியாக ஒவ்வொரு முகாம் பகுதியாகும் நேரடியாக சென்று கட்சியின் கட்டமைப்பு வலிமைபடுத்தவும், பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டாவில் இந்திய அரசியலமைப்பின் தந்தை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் வெண்கல சிலையை அமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டுகிறோம். பாதுகாப்பை உறுதி படுத்தவும், உடல்நலனை பாதுகாக்கும் வகையில், தலைவர் தொல். திருமாவளனின், பெரம்பலூர் சுற்றுப் பயணத்தில் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் மட்டுமே தலைவரை பங்கேற்க வைப்போம் என்றும், இரவு 9 மணிக்கு மேல் தலைவரை சந்திப்பதை தவிர்ப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2026 - 09:33:37
Privacy-Data & cookie usage: