பெரம்பலூர் அருகே பைக்கில் சென்ற ரவுடி அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி!

schedule
2023-05-14 | 20:14h
update
2023-05-14 | 20:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A rowdy on a bike collided with an unidentified vehicle near Perambalur and died!

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிபாளையம் கிராமத்தை சேர்ந்த மோகன் மகன் ரெஜி என்கிற ரகுநாத் (31). பிரபல ரவுடியான இவர் மீது பெரம்பலூர் போலீசில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இன்று மாலை சுமார் 7 மணி அளவில், அவருக்கு சொந்தமான பல்சர் பைக்கில் அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக சென்றார். அப்போது லாடபுரம் பிரிவு அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கே சிகிச்சை என்பது உயிர் இழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.08.2026 - 07:41:01
Privacy-Data & cookie usage: