பெரம்பலூர் அருகே கிணற்று நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

schedule
2018-05-16 | 07:52h
update
2018-05-16 | 07:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A school student kills a well into the well water near Perambalur

பெரம்பலூர் அருகே கிணற்றுக்குள் கால் கழுவ சென்ற மாணவன் பரிதாபமாக உயிரழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், கொளப்பாடி சேர்ந்தவர் நீதித்செல்வன் மகன்கள், தமிழ்ச்செல்வன் (வயது 12), 7ம் வகுப்பு பயின்று வந்தார். இவரது தம்பி நித்தீஷ் (10) ஆகிய இருவரும் எழுமூரில் நடக்கும் திருவிழாவிற்காக சென்றிருந்தனர். இந்நிலையில் இன்று காலை சுமார் 8.30 மணியளவில், அப்பகுதியில் உள்ள கண்ணபிரான் எனபவரது வயலில் உள்ள கிணற்றில் கால் கழுவ சென்றுள்ளனர். அப்போது தமிழ்ச்செல்வன் கிணற்று நீருக்குள் தவறிவிழுந்து தத்தளித்தார். அப்போது சுற்றுப் பாரில் இருந்த நித்தீஷ் அபயகுரலை எழுப்பினார். இதை அறிந்த ஊர் மக்கள் கிணற்றுக்குள் குதித்து காப்பாற்ற முயன்றனர். அதற்குள் தத்தளித்த தமிழ்ச்செல்வன் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மங்களமேடு போலீசார் இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பபி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 04:00:54
Privacy-Data & cookie usage: