A special camp to change the power connector on 17th of Namakkal district; Tamil Nadu Electricity Board Announcement

நாமக்கல் மாவட்டத்தில் கட்டிடங்கள், விவசாயக் கிணறுகளின் மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சந்தானம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

கட்டிடங்கள் மற்றும் விவசாயக் கிணறுகளில் உள்ள பல்வேறு குறைந்த அழுத்த மின் இணைப்புகள் அதன் உரிமையாளர்களின் பெயரில் மாற்றம் செய்யப்படாமல் பழைய உரிமையாளர்களின் பெயரிலேயே இருந்து வருகிறது.

அப்படிப்பட்ட மின் இணைப்புகளை தற்போதுள்ள உரிமையாளர்கள் தங்களது பெயருக்கு மாற்றம் செய்து கொள்ளும் வகையில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் ஆகிய மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் வரும் 17-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

பெயர் மாற்ற விண்ணப்பப் படிவத்துடன், மின் இணைப்பு விண்ணப்பம் மற்றும் குறைந்த அழுத்த ஒப்பந்தப் படிவம், பெயர் மாற்றக் கட்டணம் (குடிசை அல்லாத மற்ற மின் இணைப்பு ரூ.200), குடிசை மின் இணைப்புக்கு ரூ. 50, விவசாய மின் இணைப்பாக இருப்பின் பட்டா, சிட்டா அடங்கல், வரைபடம், மின் இணைப்பு உரிமையாளர் இறப்பின் பேரில், பெயர் மாற்றம் செய்வதற்கு, கூடுதலாக முந்தைய உரிமையாளரின் இறப்புச் சான்றிதழ் அல்லது தாசில்தார் அளித்த வாரிசுச் சான்றிதழ் அல்லது மின் இணைப்பு உரிமையை நிரூபிக்க வரி ரசீது, இதர வாரிசுதாரர்களின் சம்மதக் கடிதம் அல்லது ரூ. 80-க்கான முத்திரைத்தாளில் பிணையுறுதிப் பத்திரம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
மின் இணைப்புத் துண்டிப்பு செய்யப்பட்டுள்ள மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ள மின் இணைப்புகளுக்குப் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க முடியாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Copyright 2015 - © 2020 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!