பெரம்பலூரில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை

schedule
2018-11-12 | 15:59h
update
2026-07-06 | 06:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A suicide by hanging school student in Perambalur: Police investigate

பெரம்பலூர் மாவட்ட ம் குன்னம் அருகே உள்ள அசூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லசாமி – ராஜேஸ்வரி, தம்பதியினர் இவர்கள் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள ராஷினி நகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

Advertisement

இவரது மூத்த மகள் ரம்யா, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகிறார். இளைய மகன் பரத்குமார்( வயது 16), பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் +1 படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை பரத்குமாருக்கு சாப்பாடு சமைத்து கொடுத்து விட்டு பள்ளியில் நடைபெறும் சிறப்பு வகுப்பிற்கு சென்று வருமாறு கூறிய செல்லசாமியும் அவரது மனைவி ராஜேஸ்வரியும் சொந்த கிராமமான அசூருக்கு விவசாய நிலத்தை பார்க்க சென்றவர்கள் மீண்டும் இரவு 7.30 மணியளவில் பெரம்பலூரிலுள்ள வாடகை வீட்டிற்கு வந்துள்ளனர்.

வீட்டின் கதவு உள் பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது பரத்குமார் தூக்கில் சடலமாக தொக்கியுள்ளார்.

இதுகுறித்து செல்லசாமி அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் சடலமாக தொங்கிய பள்ளி மாணவன் பரத்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதோடு, சக பள்ளி மாணவ, மாணவர்கள் இச்சம்பவம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 06:43:28
Privacy-Data & cookie usage: