A teenager died due to electric shock near Perambalur!

பெரம்பலூர் அருகே ஆட்டிற்கு இலை தழைகளை வெட்ட மரத்தின் மீது ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், புதுஅம்மாபாளையம் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமதத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் மணிகண்டன் (30). தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில், ஆடுகளுக்கு இலை தழைகளை வெட்ட மரத்தின் மீது ஏறினார். அப்போது, மரத்தின் ஒரு பகுதி மேலே மெயின் லைன் கம்பியல் மோதிக் கொண்டிருந்துள்ளது. அதில் பாய்ந்த மின்சாரம் மணிகண்டனை தாக்கியது. இதில் அவர் கீழே விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அங்கு சிகிச்சையின் போது உயிரிழந்தார்.

இது குறித்து, தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!