பெரம்பலூர் அருகே கல்குவாரி குட்டையில் குளித்த வாலிபர் பலி!

schedule
2022-07-01 | 07:35h
update
2022-07-01 | 07:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A teenager died who bathed in a stone quarry pond near Perambalur

கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே உள்ள வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் சின்னத்தம்பி (29). கல் உடைக்கும் கூலித் தொழிலாளி. திருமணமாகாதவர்.

பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் தண்ணீர்பந்தல் அருகே உள்ள இந்திரா நகரில் உள்ள தனது மாமா கொளஞ்சி என்பவரது வீட்டிற்கு விருந்தாளியாக வந்துள்ளார்.

Advertisement

கடந்த ஒரு வாரமாக தங்கியருந்த அவர், அருகே இருந்த செயல்படாத கல்குவாரி குட்டையில் குளித்து வந்துள்ளார். வழக்கம் போல் நேற்றும் மாலை சுமார் 3.30 மணிக்கு மேல், குளிக்க சென்றார். ஆனால், வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர் தேடிப் பார்த்தனர்.

அப்போது குட்டையின் மேல் பகுதியில் கைலி, காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. ஆளை மட்டும் காணவில்லை என்பதால், மருவத்தூர் போலீசாருக்கு கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரை வரவழைத்து குளத்தில் கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மேலும், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்காக பெண் பார்த்து வந்த நிலையில், வாலிபர் நீச்சல் தெரியாமல் குட்டையில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.05.2026 - 07:32:36
Privacy-Data & cookie usage: