பெரம்பலூர் அருகே தண்ணீர் குடிக்க சென்று, கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் சடலமாக மீட்பு!

schedule
2023-06-04 | 08:34h
update
2023-06-04 | 08:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A teenager who fell into a well while going to drink water near Perambalur was rescued as a dead body!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள நக்கசேலம், கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் நிரோஷ்குமார் (23), நேற்று மாலை ஆடு மேய்ந்து கொண்டிருந்தார். ஆடுகள் வீடு திரும்பியது, ஆடு மேய்த்த நிரோஷ்குமார் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் தேடி பார்த்த போது, மகேஸ்வரன் என்பவரது வயலில், செருப்பு மட்டும் கிடந்துள்ளது. சந்தேகமடைந்த உறவினர்கள், பாடாலூர் போலீசார் மற்றும் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் விபத்து மீட்பு படை உதவியுடன் இன்று காலை கிணற்றில் தேடிய போது, இன்று 10.45 மணி அளவில் நிரோஷ்குமார் உடல் கிடைத்தது. அதனை மீட்ட பாடாலூர் போலீசார் உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.08.2026 - 18:37:23
Privacy-Data & cookie usage: