பெரம்பலூர் பெட்டிக்கடையில் ரூ 30-யை திருடிக்கொண்டு ரூ.50 ஆயிரத்தை விட்டுச் சென்ற திருடன்!

schedule
2020-05-30 | 08:30h
update
2020-05-30 | 08:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A thief who stole Rs.30 from a Petty shop at Perambalur and left Rs.50 thousand!

Advertisement

பெரம்பலூர் சுந்தர் நகரை சேர்ந்த பிரபாகரன் (வயது 42) என்பவர், பாலக்கரை கலெக்டர் ஆபீஸ் சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு இவர் வழக்கம் போல் கடையை மூடி விட்டு, இன்று காலை திரும்ப வந்து கடையை திறந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. கடையினுள் சென்று பார்த்தபோது, கல்லாவில் வைத்திருந்த மூன்று 10 ரூபாயை தாள்களை மட்டும் திருடன் எடுத்துச் சென்றதும், மற்றோரிடத்தில் ரூபாய் 50 ஆயிரத்தை வைத்திருந்துள்ளார். அது திருடன் கையில் அகப்படாததால், தப்பியது. இது குறித்து கடை உரிமையாளர் பிரபாகரன் பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் தடய அறிவியல் நிபுணர்கள் ஆகியோர் உதவியுடன், கொள்ளையனை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் காலை நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 13:37:47
Privacy-Data & cookie usage: