A walk-out protest at the grieving meeting near Perambalur by differently abled persons condemning the officials.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றிய ஊராட்சி அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்திற்கு உள்ளே செல்லாமல் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக கூறி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான, ஆலத்தூர் ஒன்றிய அமைப்பாளர் தமிழ்செல்வன் தலைமையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தெரிவித்ததாவது மாற்றுத் திறனாளிகளுக்கு மாதா மாதம் 2வது செவ்வாய்க் கிழமை பிடிஓ தலைமையிலும், 2 மாதத்திற்கு ஒரு முறை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அல்லது திட்ட அலுவலர் ஆகியோர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்த மாதம் மாவட்ட அதிகாரி தலைமையில் நடைபெற வேண்டிய கூட்டம் அதிகாரி வராததால் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 2 மாதமாக இவரிடம் தான் 100 வேலை முழுமையாக கிடைக்கவில்லை சட்டக் கூலி நாள் ஒன்றுக்கு 281 ரூபாய் கிடைக்கவில்லை அரசாணைப்படி நான்கு மணிநேர வேலை என்பதை மீறி அதிக நேரம் வேலை வாங்குவது விதிமுறையை மீறி இரண்டு கிலோ மீட்டர் கடந்து பணி வழங்குவது மற்றும் உடல் ஊனகுறைபாடை காரணம் காட்டி வேலை வழங்க மறுப்பது ஆகிய குறைகளை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் இன்றும் இவரது தலைமையிலேயே கூட்டம் நடைபெறுவதை அறிந்த மாற்றுத் திறனாளிகள் கூட்ட அரங்கிற்கு செல்லாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஊழியர் அதிகாரிகள் முன்னிலையிலேயே உடல் ஊனத்தை காரணம் காட்டி உங்களால் வேலை செய்ய முடியாவிட்டால் எதற்கு வேலைக்கு வரவேண்டும் என்றதால் அதிகாரிகளுக்கும் மாற்று திறனாளிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு கூட்டத்தை புறக்கணித்து அலுவலக வளாகத்தை விட்டு வெளியே சென்றனர். மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர், துணை அமைப்பாளர்கள் பி.ரமேஷ், ரேவதி, சன்னாசி, முருகேசன், சுதாகா; உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!