பெரம்பலூர் அருகே அரசாங்கத்திற்கு போட்டியாக நாட்டு சாராயம் விற்ற பெண் கைது!

schedule
2022-07-08 | 17:05h
update
2022-07-08 | 17:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A woman was arrested, who sold Traditional make liquor in competition with the government near Perambalur !

பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் அருகே அரசாங்கத்திற்கு போட்டியாக நாட்டு சாராயம் விற்ற பெண்ணை, மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூர் அருகே உள்ள காரியானூரில், ஊறல் போட்டு, தயாரிக்கப்ட்ட நாட்டு சாராயத்தை அதே ஊரை சேர்ந்த பவுனாம்பாள் என்ற பெண் ஆலமரத்தின் அடியில் சுமார் 5 லிட்டர் வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பதாக வந்த தகவலின் பேரில், பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு சரவணகுமார் மற்றும் அவரது குழுவினர் சென்று அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

மதுவிலக்கு போலீசார் வயிற்றுப் பிழைப்பிற்காக சாரயம் விற்கும் பெண்களை கைது செய்வதை விட்டு விட்டு, அந்த தொழிலில் இருந்து அவர்களை மீட்டு, மறுவாழ்வு அளிக்க தொண்டு நிறுவனங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மதுக்கடைகளில் அதிக விலைக்கு விற்பதாலேயே, மலிவான விலையில் விற்கப்படும், நாட்டு சாராயத்தை தேடி மதுப்பிரியர்கள் செல்கின்றனர்.

சாராயக்கடை நடத்தி வந்தவர்கள், கல்வி நிறுவனங்களையும், கல்வி நிறுவனங்களை நடத்தி வந்த அரசாங்கம், அதிக வருவாய் பெற மதுக்டைகளையும் நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே! அரசாங்கம் அண்ணாவின் தம்பிகள் நடத்தும் மது தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பாட்டில் பாட்டிலாக மொத்தமாக கொள்முதல் செய்து, சில்லறையில் விற்று வருகிறது.

ஒரு காலத்தில், பாக்கட் சாராயம் தமிழகத்திலும் விற்கப்பட்டு வந்தது. தற்போது சாராயக் கடைகள் புதுச்சேரியிலும், கேரளாவில் கூடுதலாக கள்ளுக் கடைகளையும் அந்த அரசுகள் நடத்தி வருகின்றன.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல், மதுப்பிரியர்கள் , போதைப்பிரியர்கள் திருந்தாத வரை அனைத்து போதை வஸ்துக்களும் மக்களிடம் தொடர்ந்து விற்பதால் தடுப்பது சிரமம். மது அருந்தும் மனிதர்களின் வாழ்நாட்களும் குறைந்து கொண்டே வருவதோடு, குடும்பங்களும் சீரழிந்து வருகின்றன.

அன்று பெரியார் கள்ளுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது வயலில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். அண்ணா அன்றே சொன்னார், மது விற்பனையில் இருந்து வரும் பணம் தொழுநோயாளி கையில் இருக்கும் வெண்ணெய் போன்றது. இதையெல்லாம் கண்டுக் கொள்ளாத அண்ணாவின் தம்பிகளின் ஆதரவு பெற்றவர்களே தமிழ்நாட்டில் இருக்கும் 11 தொழிற்சாலைகளில், 7 மது உற்பத்தி தொழிற்சாலைகளை நடத்தி, கொள்கையை மறந்து கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.

தாய்மார்களின் மகிழ்ச்சிக்கு மதுவிலக்கே காரணம் என்பதை சுட்டி காட்டிய அண்ணா மதுக்கடைகளை திறக்க மறுத்தார். அதுபோல, திராவிட மாடல் ஆட்சியிலும் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அனைத்து தாய்மார்களின் கருத்தாக உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 11:20:51
Privacy-Data & cookie usage: