பெரம்பலூர் அருகே லிப்ட் கேட்டு சென்ற பெண் நகைக்காக எரித்து கொலை!

schedule
2023-06-20 | 18:37h
update
2023-06-20 | 18:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A woman who asked for a lift near Perambalur was burnt to death for jewelry!

மாரியம்மாள் உயிரோடு இருந்த போது எடுத்தப்படம்.

பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அருகே உள்ள குளத்தூரை சேர்ந்தவர் மாரியம்மாள் (62), கடந்த 15ம் தேதி தனது ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்காக இ-சேவை மையத்திற்கு சென்ற, அவர் வீடு திரும்பவில்லை, அவரது செல்போனும், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால், அவரது உறவினர்கள் தேடி வந்த நிலையில், கடந்த 18ம் தேதி மாரியம்மாள் மகன் ராஜ்குமாரும், மருத்துவர் காவல் நிலையத்தில் தனது தாய் வீடு திரும்பாதது குறித்து புகார் கொடுத்து இருந்தார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisement

இந் நிலையில், உறவினர்கள் மாரியம்மாள் சென்ற வழியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்த போது அவர் காரை கிராமத்தை கடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு மீண்டும், தேடி போது, கொளக்காநத்தம் காட்டுப் பகுதியில் பெண் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது. அங்கு கிடந்த, தாயத்து உள்ளிட்ட தடய பொருட்களை வைத்து கொல்லப்பட்டு, எரிக்கபட்டடு கிடப்பது மாரியம்மாள்தான் என்பதை உறுதிப்படுத்தினர். இது குறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,

நடத்திய முதற்கட்ட விசாரணையில், நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டிருப்பதும், லிப்ட் கேட்டு சென்றிருப்பதும், தெரிய வந்ததது. மேலும், கொலைக் குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மாரியம்மாள் அணிந்திருந்த ஒரு பவுன் மதிப்புள்ள, தோடு, கம்மல், மாட்டல் போன்ற நகைக்காக கொலை செய்யப்பபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.08.2026 - 17:50:01
Privacy-Data & cookie usage: