பெரம்பலூரில் கத்தியை காட்டி மிரட்டி, கல்லூரி மாணவியை மீண்டும் காதலிக்க வற்புறுத்தியவர் கைது!  

schedule
2022-05-28 | 18:21h
update
2022-05-29 | 06:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

A Young man has been arrested in Perambalur for threatening a knife and forcing a college student to fall in love again.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், நேற்று மாலை, கத்தியை வைத்து கொண்டு கல்லூரி மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபரை, போலீசார் சிறைக்கு அனுப்பினர்.

பெரம்பலூர் மாவட்டம், துங்கபுரத்தை சேர்ந்த அறிவழகன் மகன் ஆகாஷ் (22). படித்து முடித்து விட்டு வீட்டில் உள்ளார். அதே ஊரை ஒட்டியுள்ள கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவியும் ஆகாஷிம் காதலித்து வந்துள்ளனர். இது அவர்களது இரு வீட்டார்களுக்கு தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவர்கள் வீட்டிலும் பேசி பிரித்து விட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

கடந்த 6 மாதங்களாக மீண்டும் அந்த பெண்ணை காதலிக்க கூறி ஆகாஷ் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். மாணவி காதலிக்க மறுத்து வந்துள்ளார். பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை, அந்த பெண்ணை ஆகாஷ் தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி மாணவியை கையால் அடித்துள்ளார், மாணவியின் நண்பர் வந்ததால் ஆகாஷ் தப்பிச் சென்றார். இது குறித்து, அந்த மாணவி பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தெரிவித்தாவது:

தான் 11 ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே தன்னை காதலிக்கும்படி துன்புறுத்தி வந்ததாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும், மருதையாங்கோவில் அருகே நின்று கொண்டிருந்த போது தன்னை கையை பிடித்து இழுத்து வரும்படி கூறியதற்கு , நான் செல்ல மறுத்ததால், தன்னுடைய ஐடி கார்டு , செல்போனை பறித்தாகவும் , தனது அண்ணனுக்கு போன் செய்த போது அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும், பின்னர் பெரம்பலூர் புதிய பேருந்து நிறுத்தில் தனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், தனது நண்பர்கள் இதை பார்த்து வந்ததும் அங்கிருந்து ஓடி விட்டதாக புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், வன்கொடுமை தடுப்புச் சட்டம், மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு ஆகாஷை பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

பிரேக்-அப் ஆன காதலை மீண்டும் பிக்கப் செய்ய முயன்ற வாலிபர் சிறைக்கு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியோடு, கல்லூரி படிக்கும் காலங்களில் ஒழுங்காக படிக்காமல் சினிமா நிழலை பார்த்து விட்டு, நிஜ வாழ்க்கையை மாணவ சமுதாயம் தொலைத்து கொண்டிருப்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 12:39:37
Privacy-Data & cookie usage: