முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டு அட்டையுடன் ஆதார் இணைப்பு

schedule
2017-04-21 | 16:11h
update
2026-06-25 | 16:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Aadhar link with the Chief Minister’s Medical Insurance Card

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவக்காப்பீட்டு அட்டை பெற்றுள்ள உறுப்பினர்களின் ஆதார் எண்கள் இணைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Advertisement

இத்திட்டத்தின் கீழ் இதுவரை மருத்துவக் காப்பீட்டு திட்ட உறுப்பினர்களின் ஆதார் எண் இணைக்கப்படாமல் விடுபட்டுள்ள உறுப்பினர்களின் ஆதார் எண்களை இணைக்கும் பொருட்டு பெரம்பலூர் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் ஆதார் எண்களை இணைக்கும் பணி கிராமங்கள் தோறும் நடைப்பெற்று வருகிறது.

முதற்கட்டமாக பெரம்பலூர் வட்டம் வேலூர், சத்திரமணை, பொம்மனப்பாடி ஆகிய கிராமங்களில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இம்முகாமில் ஆதார் எண் இணைக்கப்படாமல் உள்ள மருத்துவக் காப்பீட்டு அட்டை பெற்றுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 16:57:39
Privacy-Data & cookie usage: