பெரம்பலூர் வங்கியில் நிறுத்தப்பட்ட 2 பைக்குகளில் இருந்து சுமார் ரூ.4 லட்சம் கொள்ளை!

schedule
2022-09-21 | 18:12h
update
2022-09-21 | 18:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

About Rs 4 lakh stolen from 2 bikes parked in front of a bank in Perambalur!

பெரம்பலூரில் வங்கி முன்பு நிறுத்திய மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ. 3லட்சத்து 90 ஆயிரம் கொள்ளைபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் – துறைமங்கலம் பகுதியில் இயங்கி வரும், கனரா வங்கியில் எறையசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த வரதாராஜ் என்ற விவசாயி விவசாய கடனாக ரூ. 1லட்சத்து 90 ஆயிரத்தை பெற்றுள்ளார். அதை வங்கி முன்பு நிறுத்திவைத்திருந்த அவரது மோட்டார்சைக்கிள் பெட்டியில் வைத்துவிட்டு போன் பேசி கொண்டு இருந்துள்ளார்.

Advertisement

அதே போல, எளம்பலூர் இந்திரா நகரை சேர்ந்த எலக்ட்ரிசன் பாலமுருகன் என்பவர் வீட்டு லோன் 2லட்ச ரூபாயை வாங்கி, அவரும் வங்கி முன்பு நிறுத்தியிருந்த அவரது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து விட்டு ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்றுள்ளார்.

இருவரும் அசந்த சமயம் பார்த்து 2 மோட்டார் சைக்கிள்களில், வைக்கப்பட்டிருந்த ரூ. 3லட்சத்து 90 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.

தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமாரா காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேற்றும் இந்த வங்கி முன்பு இருசக்கரவாகனத்தில் வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாய் திருடுபோனதாக கூறப்படுகிறது.இதனால் வங்கியில் பணம் எடுத்து வரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 22:43:06
Privacy-Data & cookie usage: