பெரம்பலூரில் விபத்து : நேற்றிரவு உயிரிழந்தவரின் அடையாளம் தெரிந்தது

schedule
2017-08-17 | 06:03h
update
2026-07-03 | 10:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Accident at Perambalur: Last night’s dead man’s identity was visible பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, நான்கு ரோடு செல்லும் சாலையில் லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளின் அடையாளத்தை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தது வண்டி உரிமையாளர் சோமண்டாபுதூரை சேர்ந்த எலக்ட்ரீசியன் சுந்தரராஜனாக (வயது 27) இருக்கலாம் என கருதினர். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் சுந்தரராஜன் இல்லை என்றும் அவர் கேரளாவில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

மேலும், போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் எளம்பலூரை சேர்ந்த அப்துல்கனி மகன் சுலைமான் (வயது 33) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. இது வழக்குப் பதிவு செய்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 10:03:15
Privacy-Data & cookie usage: