பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து: பெண் ஒருவர் பலி; ஆபத்தான நிலையில் 2 பேர் கவலைக்கிடம்!

schedule
2022-08-27 | 07:47h
update
2022-08-27 | 07:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Accident involving unidentified vehicle near Perambalur: Woman killed; 2 people are in critical condition and are worried!

நீலகிரி மாவட்டம், குள்ளகம்பி குன்னூரை சேர்ந்தவர் மருதை மனைவி மதுமிதா (24), இவர் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள அவரது மாமா மகேந்திரன் என்பவரது வீட்டில் தங்கி, சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலயராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 மாதங்களாக உடல் நிலை சரியில்லாததால் வீட்டில் இருந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் இன்று அதிகாலை வயிறு வலிப்பதாக கூறி ஸ்கூட்டரில் அவரது மாமா மகேந்திரன். பேருந்து ஓட்டுனராக உள்ளார். இவரது மனைவி இளவரசி (37) மற்றும் மதுமிதா மூன்று பேரும் சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று விட்டு அதிகாலை 04:45 மணியளவில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம்நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை மகேந்திரன் ஓட்டி வந்துள்ளார். இருவரும் பின் அமர்ந்து வந்துள்ளனர்.

வண்டி நெடுவாசல் பிரிவு எதிரே வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விபத்திற்குள்ளானது. பெரம்பலூர் போலீசார், தீயணைப்பு மற்றும் விபத்து மீட்பு படையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சையின் போது மதுமிதா இறந்து விட்டார். கணவன் – மனைவி இருவரும் ஐசூயூ -வில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்பத்தி விட்டு தப்பி சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 15:35:20
Privacy-Data & cookie usage: