பெரம்பலூர் அருகே விபத்து; கிளிஞ்சல்கள் ஏற்றி சென்ற லாரி மீது கார் மோதல் ! வாலிபர் பலி!

schedule
2019-09-10 | 07:31h
update
2019-09-10 | 07:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Accident near Perambalur; Car collision with truck Sacrifice of the young men!

பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை நேரத்தில், கிளிஞ்சல்கள் ஏற்றி சென்ற லாரியின் பின்புறம் கார் மோதியதில் காரை ஓட்டி வந்த வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் இருந்து விருதுநகரில் உள்ள தொழிற்சாலைக்கு கிளிஞ்சல்கள் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் பகுதியில் திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரியை நோக்கி சென்று கொண்டிருந்த கார், முன்னே கிளிஞ்சல்கள் ஏற்றி சென்ற லாரி மீது மோதியது. காரை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் அருகே உள்ள கோடிமுனை கிராமத்தை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை மகன் மெல்டான் (வயது 35), என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் அதிகாலை 2.30 மணிக்கு நடந்தது.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் காவல் நிலையத்தினர், சுற்றுக்காவல் காவலர்கள், விபத்து மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

விபத்தில் இறந்த மெல்டானின் உடலை உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து கரணமாக சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை காவல் துறையினர் சீர் செய்து செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் காவல் துறையினர், லாரி ஓட்டுனரான, திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கொப்பம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அசோக்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 12:11:07
Privacy-Data & cookie usage: