பெரம்பலூர் அருகே விபத்து: நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதல்: 2 பேர் பலி!

schedule
2023-01-06 | 06:08h
update
2023-01-06 | 06:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Accident near Perambalur: Van collides with truck: 2 killed!

பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது, வேன் மோதிய விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரழந்தனர்.

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியை சேர்ந்த பெண்கள் 17 பேர் திருவண்ணாமலைக்கு சாமி கும்பிடுவதற்காக ஒரு வேனில் (TN 59Bz8644) சென்று கொண்டிருந்தனர். வேனை மதுரை மாவட்டம், கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் மகாலிங்கம் (63), ஓட்டி வந்தார். வேன், இன்று அதிகாலை சுமார் 12.15 மணியளவில், பெரம்பலூர் மாவட்டம், விஜயகோபாலபுரம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த வெளி மாநில லாரி (TS28T1717) மீது விபத்திற்குள்ளானது. விபத்தில் சம்பவ இடத்திலேயே மட்டங்கிபட்டி கிராமத்தை சேர்ந்த ஞானசேகர் மனைவி (50), சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த அதே ஊரை சேர்ந்த கண்ணன் மனைவி கோமதி (40), என்பவரை பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த போது உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்த மற்ற பெண்களை மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். டிரைவர் உள்பட 6 பெண்கள் பலத்த காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 9 பெண்கள் புற நோயாளியாக சிகிச்சை பெற்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்து வாகன ஓட்டிகளை அச்சமடடைய செய்துள்ளது. MRF டயர் கம்பனிக்கு வரும் வெளிமாநில லாரிகளை விபத்து ஏற்படுத்தும் வகையில் இயக்குவதையும், நிறுத்துவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 03:41:36
Privacy-Data & cookie usage: