பெரம்பலூர் அருகே மின் கம்பத்தில் கார் மோதி விபத்து: டாக்டர் பலி!

schedule
2023-09-01 | 15:24h
update
2023-09-01 | 15:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Accident near Perambalur where a car collided with an electric pole: Doctor died!

திண்டுக்கல் மாநகராட்சி லட்சுமி சுந்தரம் காலனியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் ஸ்ரீதர்(34). மருத்துவரான இவர் புதுச்சேரி பிள்ளையார் குப்பம் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி மெடிக்கல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டியூட்டில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தர்.

Advertisement

இந்நிலையில் நேற்று முன்தினம் பாண்டிச்சேரியில் இருந்து சொந்த ஊரான திண்டுக்கல் சென்று விட்டு, மீண்டும் பணியில் ஈடுபடுவதற்காக புதுச்சேரி நோக்கி தனது ஃபோர்டு ஃபிகோ காரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தார்.

கார் பெரம்பலூர் அருகே மூன்று ரோடு மேம்பாலத்திற்கும் நான்கு ரோடு மேம்பாலத்திற்கும் இடையே கார்த்திக் பெட்ரோல் பங்க் என்ற இடத்தில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த திடீர் சாலை விபத்தில், டாக்டர் ஸ்ரீதர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் உயிரிழந்து கிடந்த டாக்டர் ஸ்ரீதரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.08.2026 - 05:10:32
Privacy-Data & cookie usage: