பெரம்பலூர் பகுதியில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் இருவர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

schedule
2016-03-11 | 14:38h
update
2026-06-22 | 03:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் துறைமங்கலம் அரசு அலுவலர் குடியிருப்பை கிருஷ்ணசாமி மகன் ராமசாமி(30). இவர் நேற்று இரவு தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் விஜயகோபாலபுரத்திற்கும் மலையப்பநகர் பிரிவு பாதைக்கும் இடையே சிறுவாச்சூர் துணை மின் நிலைத்திற்கு அருகே வந்த போது ராமசாமி ஓட்டி வந்த டூவீலர் எதிர்பாரத விதமாக நிலை தடுமாறி சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

இந்த விபத்தில் தலை, முகம் மற்றும் உடல் பகுதியில் படுகாயமடைந்த ராமசாமி அவசர சிகிச்சை பிரிவில் ராமசாமி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

இதேபோல் மற்றொரு விபத்து:

மங்களமேடு அருகே சாலையோர பெயர் பலகையில் மோதி லாரி டிரைவர் படுகாயமடைந்தார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள தம்மம்பட்டியிலிருந்து கொசு வலைகளை ஏற்றி கொண்டு கொல்கத்தா நோக்கி சென்று கொண்ருந்தது.

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு என்ற இடத்தில் அதிகாலை 1மணியளவில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர இரும்பினாலான பெயர் பலகையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த லாரி டிரைவரான தம்மம்பட்டி அருகே உள்ள கொட்டையான்பட்டி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் ரமேஷ் (43) படுகாயமடைந்த பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 03:50:34
Privacy-Data & cookie usage: