பெரம்பலூர் அருகே சோளதட்டைக்கு தீ வைத்த போது விபத்து: கன்றுகுட்டி மாடு பலி; 10 மூட்டை சோளம் சாம்பல்!

schedule
2021-04-26 | 15:44h
update
2021-04-26 | 15:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Accident while setting fire to a cornfield near Perambalur: Calf killed with Cow; 10 bundles of corn ash!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் தெற்கு பகுதியை சேர்ந்த வடமலை மகன் ராமசாமி இன்று மதியம் 2:30 மணிக்கு காய்ந்த சோளத்திற்கு தீ வைத்து எரித்து கொண்டிருந்தார். அருகில் இருந்த நடுநதி மனைவி சாந்தி (39) என்பவருக்கு வயலுக்கும் தீ பரவியது. அங்கு கட்டப்பட்டிருந்த, பசு மாடு மற்றும் 15 நாட்களே ஆன கன்றுக்குட்டி இரண்டும் தீயில் வெந்து இறந்துவிட்டது. மேலும் அடுத்துள்ள கணேசன் மகன் முருகேசன் (42) என்பவர் அறுவடை செய்த வைத்திருந்த 10 மூட்டை சோளப்பயிரும் தீயில் எரிந்து நாசமாகி விட்டது. இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வி.களத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.08.2026 - 08:30:44
Privacy-Data & cookie usage: