போலி செய்தியாளர்கள் மீது நடவடிக்கை ; பெரம்பலூர் கலெக்டர் எச்சரிக்கை!

schedule
2023-09-25 | 10:07h
update
2023-09-25 | 10:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Action on Fake Journalists; Perambalur Collector Alert!

பெரம்பலுார் மாவட்டத்தில் உரிய அங்கீகாரம் இல்லாமல் சிலர் தங்களது இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பிரஸ் (PRESS) என ஒட்டிக்கொண்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், அந்த நபர்கள் அரசு அலுலவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள், வணிக நிறுவனங்களை மிரட்டி பணம் வசூலிப்பதாகவும், இதனால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கை மற்றும் ஊடக செய்தியாளர்களாகிய தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் பெரம்பலுார் மாவட்ட செய்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

செய்தி மக்கள் தொடர்புத்துறையால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்களின் மாவட்ட பிரதிநிதிகளுக்கு இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஒட்டுவதற்கு பிரத்யேக ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகின்றது.

இந்த ஸ்டிக்கர்களை தவிர PRESS என வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்: https://dsmatrimony.net/

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 00:53:14
Privacy-Data & cookie usage: