Action to provide appropriate compensation to all affected farmers in Perambalur district; Collector Info!


பெரம்பலூர். மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மறைந்த முதுபெரும் தலைவர் சங்கரய்யா மறைவிற்காக மவுன அஞ்சலி செலுத்தினார். இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தனர். அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் போதியளவு மழை இல்லாத காரணத்தினால் மக்காச்சோளப் பயிர்கள் காய்ந்து விட்டது எனவும், அதற்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் பெரும்பாலான விவாசயிளும் கோரிக்கை வைத்தனர்.

பின்னர் கலெக்டர் தெரிவித்தாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்த கரும்புக்கான சிறப்பு ஊக்கத் தொகை சர்க்கரை ஆலை மூலம் விரைவில் வழங்கப்படும். போதியளவு மழை பெய்யாத காரணத்தினால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிர்கள் கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு வட்டத்திலும் வேளாண்மைத் துறையினர் வருவாய்த்துறையினருடன் இணைந்து பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுக்கும் பணிகளை செய்து வருகின்றார்கள். கடந்த 10 நாட்களுக்கும் மேல் இந்த கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இன்று வரை சுமார் 65,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. கணக்கடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் பாதிக்கப்பட்டதாக கணக்கெடுக்கப்பட்டுள்ள நிலங்களின் விபரம் சம்மந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும், கிராம நிர்வாக அலுவலகங்களிலும் விவாசாயிகளின் பார்வைக்காக வைக்கப்படும். கணக்கெடுப்புப் பணிகளில் ஏதேனும் குறைபாடு இருந்தால் தெரிவிக்கலாம். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே மாவட்ட நிர்வாகத்தின் நோக்கம். எனவே பயிர் பாதிப்புக்குள்ளான விவசாயிகள் தங்கள் நிலத்தின் விபரத்தை அருகில் உள்ள வேளாண்மை அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

படைப்புழு தாக்குதலில் இருந்து பயிர்களைக் காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேளாண் அறிவியல் மைய அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். பல்வேறு முறைகள் இருந்தாலும், ஒரே பயிரை பயிரிடாமல் சுழற்சி முறையில் பயிர்களை பயிரிடுவது படைப்புழு தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள சிறந்த வழி என்று தெரிவித்தனர்.

முன்னதாக பட்டுவளர்ச்சித் துறையின் மூலம் விவாசயிகளுக்காக கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!