தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க கூடுதல் பேருந்துகள் ; பெரம்பலூர் கலெக்டர் தகவல்

schedule
2021-03-30 | 03:11h
update
2021-03-30 | 03:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Additional buses to vote ahead of Tamil Nadu Assembly general election; Perambalur Collector Information

பெரம்பலூர் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான வெங்டபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 06.04.2021 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு வாக்காளர்கள் தங்களது வாக்குகளை உரிய வாக்குமையத்தில் பதிவு செய்ய ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகளை இயக்கவுள்ளது.

பொதுமக்கள் எளிதாக எவ்வித இடையூறுமின்றி பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், பெரம்பலூh;, ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு 04.04.2021, 05.04.2021 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கபடவுள்ளன.

Advertisement

சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம் மற்றும் திருவையாறு செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் (மெப்ஸ்) அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும் கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.

மேலும் 01.04.2021 முதல் 08.04.2021 வரை திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப பேருந்துகள் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

​மேலும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிந்து மீண்டும் அவரவர் ஊர்களுக்கு செல்ல 06.04.2021, 07.04.2021, 08.04.2021 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 21:26:49
Privacy-Data & cookie usage: